Paristamil Navigation Paristamil advert login

'Peugeot' மகிழுந்து!!

 'Peugeot' மகிழுந்து!!

26 ஆனி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18481


 
பிரான்சில் மகிழுந்து தயாரிப்புகளில் பெயர்பெற்றது Peugeot நிறுவனம் ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வளர்ச்சிகளை கொண்டு.. வெற்றிப்படிகளை கடந்து... இன்று விற்பனையில் சக்கை போடு போடும் நிறுவனமாக மாறியிருக்கிறது. 
 
Peugeot நிறுவனம் 1810 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மகிழுந்து தயாரிப்புகளை பற்றி Peugeot நிறுவனம் கனவு கூட கண்டிருக்காது. கோப்பி தயாரிக்கும் ஆலைகளை உருவாக்கிய நிறுவனம்... அதில் பாரிய இலாபத்தை ஈட்ட.., பின்னர் துவிச்சக்கர வண்டிகளை தயாரிக்கலாம் என்ற சிந்தனைக்குள் வந்தது. 
 
அதன் பின்னர் 1858ஆம் ஆண்டும் நவம்பர் 20ம் திகதி சிங்கத்தின் உருவத்தை, Peugeot நிறுவனத்தின் இலச்சினையாக அறிவித்தது. அதன் பின்னர் Steam car எனும் கிறுக்குத்தனமாக முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக அது வெற்றியளிக்க.., மகிழுந்து தயாரிப்புக்குள் ஒரேயடியாக நுழைந்தது. 
 
 1896 ஆம் ஆண்டு, "Société des Automobiles Peugeot" எனும் முழுநேர மகிழுந்து தயாரிப்பாளர்கள் ஆனார்கள். குடும்ப கார், லக்ஸரி கார், ரேஸ் கார் என பல விதங்களில் உலக கார் தயாரிப்பாளர்களோடு பந்தையத்தில் கலந்துகொண்டு மகிழுந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்தது.
 
தரமும், சேவைகளும் வாடிக்கையாளர்களை கவர... விற்பனையில் சூடு பிடித்தது. 2013ஆம் ஆண்டு, 'European Car of the Year' எனும் பெருமைமிகு விருதை பெற்றுக்கொண்டது. ஆரம்பத்தில் இருந்து Peugeot மற்றும் Citroën இணை நிறுவனங்களாக இருந்தன. 1926ஆம் ஆண்டு இரண்டு நிறுவனக்களும் தனி தனி ஆகின. இன்று இரண்டு நிறுவனங்களும் ஒன்றுக்கொண்று போட்டியுடன் முதலாம் இடத்தை தக்கவைக்க போராடுகின்றன. ஆனால் இந்த பந்தையத்தில் இரு நிறுவனங்களும் மாறிமாறி வெற்றியீட்டுகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்