Paristamil Navigation Paristamil advert login

இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பேரணி : பிரபலங்கள் ஆதரவு!

இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக பேரணி : பிரபலங்கள்  ஆதரவு!

10 வைகாசி 2025 சனி 13:48 | பார்வைகள் : 407


இஸ்லாமிய வெறுப்பு (l'islamophobie) அதிகரித்து வருவதை கண்டித்து, மே 11 ஞாயிற்றுக்கிழமை பரிசில் பேரணி நடத்த பிரபலங்களும் சமூக அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளனர். இப் பேரணி place de la Bastilleஇல் நாளை மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

இது, ஏப்ரல் 25 அன்று Gare பகுதியில் உள்ள மசூதியில் இளைஞர் அபூபக்கர் சிசே கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி "இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் கொலை செய்ததாக" கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரணியை ஒருங்கிணைக்கும் அமைப்பாளர்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பை அரசியல் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிக்கிறார்கள்.

மாணவர்கள், யூத மதத்தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூகச் செயல்பாட்டாளர்கள் இந்த எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

எழுத்தாளர் அனீ எர்னோ (Annie Ernaux), நடிகை அடெல் ஹாய்னெல் (Adèle Haenel), மற்றும் நகைச்சுவையாளர் வாலி டியா (Waly Dia) உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

"இஸ்லாமிய வெறுப்புகொலை செய்கிறது" என தெரிவித்துள்ள தேசியக் கூட்டணியின் தலைவர்கள், இது முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடையது எனக் கூறி பேரணிக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்