போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: டிரம்ப் அறிவிப்பு - உலக நாடுகள் வரவேற்பு

10 வைகாசி 2025 சனி 16:38 | பார்வைகள் : 141
போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளதனை உலக நாடுகள் வரவேற்றுள்ளது.
இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 15 இடங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ரேடாா்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. வியாழக்கிழமை இரவில் ஜம்மு, பதான்கோட், உதம்பூா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்த நிலையில், அந்த முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் சர்வதேச எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.