யூரோ கிண்ண வெற்றியாளருக்கு - "Confederations Cup" போட்டியில் நுழைய தகுதி!

25 ஆனி 2016 சனி 10:30 | பார்வைகள் : 21391
நடைபெற்றுக்கொண்டிருக்கும் யூரோகிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டி ஜூலை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு இடம்பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக, 2017ல் நடைபெற இருக்கும் Confederations Cup போட்டியில் விளையாட தகுதிபெறும்.
FIFA Confederations Cup போட்டிகள் இம்முறை ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. யூரோ கிண்ண போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக Confederations Cup போட்டிக்குள் நுழைந்துவிடும். ஒருவேளை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அல்லது, ரஷ்யா வெற்றிபெற்றால் 'ரன்னர் அப்' அணி Confederations Cup போட்டிக்குள் நுழையும். ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஏலவே Confederations Cup போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றமையே இதற்கு காரணம்.
அதேபோல் ஜெர்மனி மற்றும் ரஷ்யா அணிகள் இறுதிப்போட்டியில் நுழைந்தால் அரை இறுதியில் தோல்வியடைந்த அணி Confederations Cup போட்டிக்கு தகுதி பெறும். அரை இறுதியில் இரண்டு அணிகள் தோல்வியடைந்திருக்கும். அதனால் புள்ளிகளின் படிப்படையில் ஒரு அணி தேர்வாகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா Confederations Cup போட்டிகளை நடாத்துவதால் தானகவே போட்டிக்குள் நுழைகிறது. அதே போல் ஜெர்மனி உலக கிண்ண வெற்றியாளர் என்பதால் தேர்வாகியுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவும் ஏலவே தெரிவாகியிருக்கிறது ( ஆசிய கோப்பை வெற்றியாளர்). அதேபோல் கோபா அமெரிக்கா போட்டியில் வெற்றி பெற்ற அணி , யூரோ கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற அணி, CONCACAF Gold Cup போட்டியில் வெற்றிபெற்ற அணி உட்பட மொத்தம் 6 அணிகள் Confederations போட்டியில் தெரிவாகி/ தெரிவாக உள்ளது!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025