Paristamil Navigation Paristamil advert login

இந்தியா, பாகிஸ்தான் உடனடி சண்டை நிறுத்தம்! டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் உடனடி சண்டை நிறுத்தம்! டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

10 வைகாசி 2025 சனி 16:38 | பார்வைகள் : 177


நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையான உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தியா, பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை உறுதி செய்து தனது பதிவில் அறிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தின் பதிவில், "அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார்.

ஆனால், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாக வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்