ஜெயிலர் 2வில் நடிக்க பாலகிருஷ்ணா கேட்ட சம்பளம் இத்தனை கோடியா ?

10 வைகாசி 2025 சனி 17:27 | பார்வைகள் : 156
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் நடிப்பதற்காக கேட்ட மிகப்பெரிய சம்பளத்தை கொடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 'ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பாலையா இந்த படத்தில் கூடுதல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், அவர் இந்த படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்காக அவர் கேட்ட சம்பளம் 50 கோடி என்றும், அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.