அனல் பறக்கும் அரை இறுதி!!
24 ஆனி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23310
'இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பார்கள்?!' என்பது எவ்வளவு பரபரப்பை தருமோ... அதற்கு சற்றும் குறைவில்லாதது 'இறுதிப்போட்டியில் யார் யார் மோதுவார்கள்?' எனும் கேள்வி! அதற்கு விடை அரை இறுதியின் முடிவில் நமக்கு தெரியவரும்!
இந்த வருடத்து அரை இறுதி போட்டிகள் ஜூலை 7ம், 8ம் திகதிகள் நடைபெறுகிறது. நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளின் முடிவில் வெற்றிபெறும் இரண்டு அணி இறுதிப்போட்டியில் போதும்.
7ம் திகதி!!
Marseille மற்றும் Lille நகரில் இடம்பெறும் கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் 7ம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெற இருக்கும் அரை இறுதியில் மோத இருக்கின்றன. இப்போட்டிகள் லியோன் நகரில் உள்ள Stade de Lyon மைதானத்தில் இடம்பெறும். போட்டி இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும். இப்போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு களமிறங்கும்!!
8ம் திகதி!!
வெள்ளிக்கிழமை Marseille நகரின் Stade Vélodrome மைதானத்தில் இடம்பெற இருக்கும் இரை இறுதி போட்டியில் Bordeaux நகர் மற்றும், St-Denis நகரில் இடம்பெறும் கால் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மோதுகின்றன. முந்தைய நாள் ஆட்டத்தில் இறுதிப்போட்டியில் விளையாடும் ஒரு அணி தெரிவாகியிருக்கும் நிலையில்... இறுதிப்போட்டியில் விளையாடும் மற்றுமொரு அணி எது என்பது இந்த போட்டி முடிவில் தெரிந்துவிடும்!!
தொடர்ந்து, யூரோ கிண்ணம் 2016ஆம் ஆண்டின் 'த்ரில்' இறுதிப்போட்டி ஜூலை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு Saint- Denis நகரின் Stade de france மைதானத்தில் இடம்பெறும்!!
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan