500 வாகனங்கள் - 3.000 பேர் - ரோடியோ - அதிரடி நடவடிக்கை!!

11 வைகாசி 2025 ஞாயிறு 01:03 | பார்வைகள் : 332
போர்தோவில் ( Bordeaux - Gironde), ஒற்றைச் சில் உந்துருளி ஓட்டமான ரோடியோவை மாபெரும் அளவில் நடாத்த 500 வாகனங்களும் 3.000 பேரும் ஒன்றிணைந்துள்ளனர். இதை மிகவும் உச்சமாக நடாத்திக் காவற்துறையினரிற்குச் சவால் விட நினைத்துள்ளனர்.
காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் இது தடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கை போர்தோவின் தூர மேற்குப் பகுதியில் உள்ள Bordeaux-Lac பகுதியில் இந்த காட்டுத்தன ஓட்டமான «runs sauvages» ஒவ்வொரு வார இறுதியிலும் நடப்பது வழமையாக உள்ளது.
இதைத் தடுக்க காவற்துறையினர் கண்ணீர் புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களைக் கலைக்க முடிந்தாலும், யாரையும் கைது செய்திருக்க முடியவில்லை. மிகவும் வேகமாக அவர்கள் தப்பி உள்ளனர்.
இதில் இரண்டு காவற்துறையினர் காயங்களிற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த ரோடியோ உடனடியாக நிறுத்தப்படுவதோடு அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆணையாளர்களிற்கும் நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன் ஆணையிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.