சிறைச்சாலை நெருக்கடி - அவசரகால நிலை - தண்டனைக்குறைப்பு!

11 வைகாசி 2025 ஞாயிறு 02:30 | பார்வைகள் : 182
பிரான்சில் தொடர்ச்சியான பிரச்சினையாக இருப்பது சிறைக்குள் உள்ள நெருக்கடி. கொள்ளளவிற்கும் அதிகமான கைதிளை அடைத்து வைத்ததால், இந்தப் பிரச்சினை நீண்ட காலமாக அதிகரித்து வருகின்றது. அண்மைய சிறைத் தாக்குதல்கள் கூட இதன் எதிரொலியாக இருக்கலாம்.
இதற்கான தீர்வாக எந்தவித நிபந்தகைகளும் இன்றி, அனைத்துக் கைதிகளிற்கும் விதிவிலக்கான தண்டனைக் குறைப்பு செய்யுமாறு, நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறை நெரிசல்களை குறைக்க முடியும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இந்த நெருக்கடி அதிகமாகிக் கொண்டே போயுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி கணக்கின்படி, 62.358 இடங்கள் மட்டுமே உள்ள பிரான்சின் சிறைச்சாலைகளில் 82.921 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது 133 சதவீதம் அதிகமாகும்.