Paristamil Navigation Paristamil advert login

'Albert Londres Prize' - தலைசிறந்த விருது!!

 'Albert Londres Prize' - தலைசிறந்த விருது!!

23 ஆனி 2016 வியாழன் 10:33 | பார்வைகள் : 18580


பத்திரிகை துறையில் பிரெஞ்சு தேசம் அசாத்திய வளர்ச்சி கொண்டுள்ளது. பிரெஞ்சு பத்திரிகை வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர் குறித்த தகவல்களை ஏலவே 'பிரெஞ்சு புதினங்கள்' பகுதியில் படித்தாயிற்று. இன்று... பத்திரிகை துறைக்கான மிகச்சிறந்த விருதாக கருதப்படும் 'Albert Londres Prize' எனும் 'இதழியல் விருது' குறித்து பார்க்கலாம். 
 
மறைந்த ஊடகவியலாளர் Albert Londres அவர்களின் நினைவாக வழங்கப்படும் இவ்விருதே பிரான்சின் இதழியல் விருதுகளில் மிக கெளரவம் மிக்கது. 
 
ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரும் இவ் விருதில், வருடத்துக்கு இரண்டே இரண்டு விருதுகள் தான். ஒன்று 'சிறந்த பத்திரிகை நிருபர்' விருது. மற்றையது 'சிறந்த ஒலித்திரை (audiovisual) நிருபர்' விருது. 
 
இவ்விரண்டு விருதுகளுக்கும் பிரெஞ்சு பத்திரிகை துறையில் போட்டா போட்டி நடக்கும்! முதன் முறையாக இவ்விருதை  1933 ஆம் ஆண்டு வழங்கினார்கள்.
 
பத்திரிகையாளர் Albert Londres,  16ம் திகதி மே மாதம், 1932 ஆம் ஆண்டு இறக்க, அவருடைய மகள் இந்த விருது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அடுத்த வருடமே... 1933ஆம் ஆண்டு... முதல் விருது Émile Condroyer எனும் நிருபருக்கு நிடைத்தது.
 
இதுவரை அதிக அளவு விருதுகளை எந்த பத்திரிகையை சேர்ந்த நிருபர்கள் பெற்றிருக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா?!? 'Le Figaro' பத்திரிகையை சேர்ந்த நிரூபர்கள் தாம். 13 விருதுகளுக்கு மேல்!! இரண்டாவது இடத்தில் கடும் போட்டியில் இருப்பது 'Le Monde' ஆகும்!!
 
இந்த விருது 19 நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த 19 நபர்களும் முந்தைய விருது விழாவில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். ஒரு நிருபர் விருது பெற்றுக்கொண்டால் அவர் தானாகவே அடுத்த 19 வருடங்களுக்கு நடுவர் பட்டியலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நிருபர்களுக்கெல்லாம் பெருங்கனவான இந்த  'Albert Londres Prize' விருது கடந்தவருடம் Luc Mathieu எனும் நிருபருக்கு கிடைத்தது!! இந்த வருட விருது யாருக்கு கிடைக்கும்??! காத்திருந்து தெரிந்துகொள்ளலாம்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்