Paristamil Navigation Paristamil advert login

கருணைக் கொலை வேதனையின் முடிவா? அரசியலில் புதிய விவாதம்!

கருணைக் கொலை வேதனையின் முடிவா? அரசியலில் புதிய விவாதம்!

11 வைகாசி 2025 ஞாயிறு 14:15 | பார்வைகள் : 3437


கருணைக் கொலை சட்ட முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் Bruno Retailleau, இது சமூகவளர்ச்சிக்கு எதிரானது எனவும், நமது சமூகத்திற்கு வலிநீக்கும் சிகிச்சைகள் தேவைப்படுகிறதே தவிர மரணத்துக்கான சட்ட உதவி அல்ல" எனவும் அவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

ஆனால் Line Renaud மற்றும் முன்னாள் பிரதமர் கேப்ரியேல் அடால் (Gabriel Attal), "சிலர் தங்களது வேதனையை முடிவுக்கு கொண்டு வர விரும்பலாம்" எனவும் நோயாளிகளுக்கு மரணத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

சட்ட முன்மொழிவின்படி, சுகாதார அமைச்சர் கத்தெரின் வோட்ரின் (Catherine Vautrin), குணப்படுத்த முடியாத  தீவிர நோயால் பாதிக்கப்பட்டு தாங்க முடியாத வேதனையில் வாடும் நோயாளிகளுக்கு, தாமாகவோ அல்லது மருத்துவராலோ கருணைக் கொலை வழங்க அனுமதிக்கிறது. மேலும் இது பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட மருத்துவ விருப்பம் மட்டுமே என்றும், மனித நேயம் குறைவாகாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்