பாகிஸ்தானுக்கே செல்ல மாட்டேன் - கதறி அழுத கிரிக்கெட் வீரர் டாம் கரண்

11 வைகாசி 2025 ஞாயிறு 15:22 | பார்வைகள் : 141
போர் பதற்ற சூழலில் பாகிஸ்தானில் இருந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பட்ட துயரத்தை வங்கதேச வீரர் ரிஷாத் ஹுசைன் பகிர்ந்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்தது.
இதனையடுத்து, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்தியா பகுதிகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்த இந்தியா, பாகிஸ்தானின் சில பகுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் PSL கிரிக்கெட் தொடர் நடந்து வந்த நிலையில், இந்தியாவின் ட்ரோன்கள் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கியது.
இதனையடுத்து, PSL தொடரை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.
PSL தொடருக்காக பாகிஸ்தான் வந்திருந்த வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்ப ஆயத்தமாகிய போது, விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த சூழலில், வெளிநாட்டு வீரர்கள் அடைந்த துயரத்தை வங்கதேச வீரர் ரிஷாத் ஹுசைன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "வெளிநாட்டு வீரர்களான சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குசல் பெரேரா, டேவிட் வைஸ், டாம் கர்ரன் ஆகியோர் மிகவும் பயந்து போயிருந்தனர். இனி நான் பாகிஸ்தானுக்கு வரமாட்டேன்" என டேரில் மிட்செல் என்னிடம் கூறினார்.
விமான நிலையம் மூடப்பட்டிருந்ததைப் பார்த்த டாம் கரன், சிறு குழந்தை போல அழத் தொடங்கினார். அவரை இரண்டு மூன்று பேர் சேர்ந்து சமாதானம் செய்ய வேண்டி இருந்தது" என கூறினார்.