ஆர்த்தி அறிக்கைக்கு பின் கெனிஷா பதிவு..!

11 வைகாசி 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 306
சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின், ரவி மோகன் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், அவர் தனது நிலையை விளக்கியதுடன், தனது குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்வதாகவும், ரவி மோகன் இன்னொரு உறவை தேடி கொண்டது குறித்தும் குறிப்பிட்டார். இதனால் அவருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்த நிலையில், ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் பாடகி கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும். இல்லையெனில் துணையே இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.