சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்?

11 வைகாசி 2025 ஞாயிறு 18:24 | பார்வைகள் : 1053
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஏற்கனவே விஜய்க்கு அப்பாவாக ’ஜில்லா’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், தற்போது இன்னொரு மாஸ் நடிகருக்கு அப்பாவாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் "குட் நைட்" இயக்குனர் விநாயகன் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படம் அப்பா மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் கதை என்பதால், அப்பா கேரக்டர் வலிமையானது என்பதால், பிரபல நடிகர் ஒருவர் இந்த அப்பா கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தற்போது இந்த கேரக்டரில் நடிக்க மோகன்லால் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்கு அப்பாவாக மோகன்லால் நடித்த ’ஜில்லா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல, சிவகார்த்திகேயன் அப்பாவாக மோகன்லால் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.