Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள்!' - Théophraste Renaudot

 'சிகரம் தொட்ட மனிதர்கள்!' - Théophraste Renaudot

20 ஆனி 2016 திங்கள் 12:20 | பார்வைகள் : 18560


 
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். வெற்றியோ தோல்வியோ... புதிது புதிதாக எதையாவது முயற்சித்துக்கொண்டே இருக்கவேண்டும். மேற்கண்ட இந்த வார்த்தைகளுக்கு மிகப்பெரும் உதாரணமாக இருக்கிறார் Renaudot. (Théophraste Renaudot) தன் புதிய முயற்சிகளால் பல வரலாற்று பக்கங்களை எழுதிய  Renaudot
இன்றைய சிகரம் தொட்ட மனிதராக.!!
 
Renaudot ஒரு பத்திரிகையாளர். ஆனால் வெறுமனே பத்திரிகையாளர் என சொல்லிவிட்டு இலகுவாக கடக்க முடியாது. பிரான்சின் பத்திரிகை வரலாற்றின் ஆரம்பப்புள்ளியே இவர்தான்! பிரான்சின் முதல் பத்திரிகையாளர். 
 
பிரான்சின் Loudun நகரின் 1586ஆம் வருடம் பிறந்தார் எனும் தகவல் மாத்திரமே இவரைப்பற்றிய குறிப்பேடுகளில் இருக்கிறது.  இவரது குடும்ப பின்னணி பற்றிய எந்த தகவலும் இல்லை! மருத்துவத்துறையில் 'டொக்டர்' பட்டம் பெற்றார். 
 
பின்னாட்களின் பரிசுக்கு வந்த Renaudot, பிரான்சின் பதின்மூன்றாம் லூயிக்கு ஆஸ்த்தான மருத்துவராக இருந்தார். அதனாலேயே அவருக்கென ஒரு மரியாதையும் சில சிறப்பு வசதிகளும் கிடைக்கப்பெற்றன. அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். அதுவரை காலமும் பிரான்ஸ் அறிந்திடாத புதிய சங்கதி ஒன்றை கையிலெடுத்தார். ஆம்... பத்திரிகை! செய்தித்தாள் அச்சடிக்கலாம் என்ற பிரகாசமான 'ஐடியா' செயல்பட தொடங்கியது.
 
La Gazette என பத்திரிகைக்கு பெயர் வைத்தார். அதன் முதல் பிரதி மே மாதம் 30ம் திகதி 1631 ஆம் ஆண்டு வெளியானது. பிரெஞ்சு எழுத்துகளால் ஆன முதன் முதல் பத்திரிகை அது. பரிசுக்குள் சில பகுதிகளில் விற்பனையானது. பின்னர் Renaudot இரண்டுவருடம் கழித்து 1633ஆம் ஆண்டு  அதை வார செய்தித்தாளாக மாற்றினார். அதுவரை காலமும் குறிப்பிட்ட நாளில் வெளிவரும் என அறியமுடியாதபடி ஏதேதோ நாட்களின் எல்லாம் வெளியானது.  பின்னர் அது தன் பெயரை Gazette de France என பெயரை மாற்றிக்கொண்டு விற்பனையாகியது.
 
அதன் பின்னர் முளைவிட்ட லட்சோபலட்சம் பத்திரிகைகளுக்கு, இதழ்களுக்கு முன்னோடி இவர்தான். புதிய முயற்சிகள் எப்போதும் செய்துகொண்டே இருப்பார். பத்திரிகைகளில் கூட எண்ணற்ற மாற்றங்கள் புதுமைகளை உருவாக்கிக்கொண்டே வந்தார். அதன் பின்னர் மற்றுமொரு பரிஸ் அறிந்திடாத வேலை செய்தார் Renaudot. 
 
பரிசின் முதலாவது அடகுக்கடையை ஆரம்பித்தார். 1637ஆம் ஆண்டு. தங்கத்தை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் பணத்தை செலுத்து தங்கத்தை மீட்டலாம். அடடே.. இது பிரமாதமான 'ஐடியா'வா இருக்கே என பரிஸ் நகர மக்கள் Renaudotஐ தேடி படையெடுத்தனர். அதன் பின்னர் தன் குறித்து சுய ஆய்வுக்கட்டுரை எல்லாம் எழுதினார். 
 
தன் வாழ்நாளில் Renaudot செய்தது எல்லாமே புதியதாகவே இருந்தது. 'ஃப்ரஷ்'சான சிந்தனைகளே அவரை இன்று சிகரம் தொட்ட மனிதராக்கியிருக்கிறது. ஊடகங்களுக்கெல்லாம் முன்னோடியான Renaudot பரிசில்  1653 காலமானார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்