இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

12 வைகாசி 2025 திங்கள் 07:50 | பார்வைகள் : 2434
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, கூறுகையில், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.