Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

12 வைகாசி 2025 திங்கள் 10:23 | பார்வைகள் : 2621


இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது. இரு நாட்டு அதிகாரிகள் ஹாட்லைன் மூலம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த மே 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான், ட்ரோன்களை வீசி தாக்கியது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் தலைமை இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். என்ன விவரம் விவாதிக்கப்பட்டது என்பது வெளியே தகவல் வரவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்