Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் கையில் கொக்கெய்ன் - கடுப்பாகும் எலிசே மாளிகை!! - காணொளி!

மக்ரோன் கையில் கொக்கெய்ன் - கடுப்பாகும் எலிசே மாளிகை!! - காணொளி!

12 வைகாசி 2025 திங்கள் 10:36 | பார்வைகள் : 647


உக்ரைனிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளையும் யுத்த நிறுத்தத்தையும் கொண்டு வர எமானுவல் மக்ரோன் மற்றைய தலைவர்களுடன் இணைந்து பெரு முயற்சி எடுத்து வருகின்றார்.

இந்த நடவடிக்கைகாக இவர்கள் ஒரு விசேடத் தொடருந்தில் செனறு கொண்டிருந்தபோது எமானுவல் மக்ரோன், ஜேர்மன் அதிபர் மற்றும் பிரித்தானிய பிரதமர் ஆகியொர் இருந்து கலந்தாலொசித்துக் கொண்டிருக்கையில், அதனைப் ஒளிப்பதிவு செய்ய வந்தவுடன், எமானுவல் மக்ரோன் அந்த மேசையில் தனக்குப் பக்கத்தில் கைதுடைத்து வைத்துவிட்டு வைத்திருந்த கடதாசியை  உடனே எடுத்து தன் காற்சட்டைப் பையில் வைக்கின்றார்.

கடதாசி மேசையில் இருப்பது ஒளிப்பதிவில் அழகாக இருக்காது என்று கருதியே இதை எடுத்து வைத்தார்.

இதனை உடனடியாகச் சில மலிந்த ஊடகங்கள், எமானுவல் மக்ரோன் மேசையிலிருந்து எடுத்து வைத்தது கொக்கெயன் அடங்கிய பை என எழுதுவதோடு மாற்றம் செய்யப்பட்ட காணொளியையும் தரவேற்றி உள்ளது.

அத்துடன்  ரஸ்யாவின் வெளிவிகார அமைச்சர் இதனை மிக மோசமாக விமர்சித்து, இவர்கள் கொக்கெய்ன் அருந்தி விட்ட்டுத் தான் கண்டபடி கதைக்கின்றார்கள் என பரப்பியும் உள்ளார்.

உடனடியாக ஜனாதிபதி மாளிகை இதற்கான எதிர்வினையை ஆற்றியிருந்தது. அத்துடன் படங்களையும் இணைத்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்