'யூரோ கிண்ணம் 1984' - நெருப்புடா!!
18 ஆனி 2016 சனி 10:00 | பார்வைகள் : 18923
பிரான்சில் உதைப்பந்தாட்ட அணி 1919ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. உலகப்போர் சமயத்தில் தோற்றம்பெற்று இராணுவ வீரர்கள் எல்லாம் உதைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தார்களாம். அதை அங்கேயே நிறுத்திவிட்டு நாம் 1984ஆம் வருடத்துக்கு வருவோம்....
அச்சமயத்தில் பிரான்சுக்கு மிகப்பெரிய 'வெற்றி' தேவைப்பட்டது. உலகத்தின் பார்வை பிரான்ஸ் உதைப்பந்தாட்ட அணி பக்கம் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருந்தது. அதற்காக பலத்த நம்பிக்கையுடன் 1984ஆம் ஆண்டு யூரோ கிண்ண போட்டிகளில் களம் இறங்கியது.
ஏலவே 1960ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண போட்டிகளின் போது சொந்தமண்ணில் பெரும் பின்னடைவை பிரான்ஸ் சந்தித்திருந்தது. அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ஏழாவது யூரோகிண்ண போட்டியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக விளையாடியது.
பிரான்சின் முக்கிய ஏழு நகரங்களில் போட்டிகள் இடம்பெற்றன. மொத்தம் 8 அணிகள், 15 போட்டிகள். ஜூன் மாதம் 12ம் திகதியில் இருந்து 27ம் திகதி வரை போட்டிகள் இடம்பெற்றன. மிக திறமையாக விளையாடிய பிரெஞ்சு அணி இறுதிப்போட்டியை நோக்கி முன்னேறியது. முந்தைய நான்கு சுற்றுக்களில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை சந்தித்தது.
இந்த ஒரு போட்டி பிரான்சுக்கு முக்கிய போட்டி. சரிந்திருந்த பிரான்சின் உதைப்பந்தாட்ட வரலாற்றை நிமிர்த்தி நேர் செய்யவேண்டிய தலையாய கடமை அந்த 11 பேர் கொண்ட அணிக்கு இருந்தது. அதோ... அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் ஸ்பெயின் அணியுடனான போட்டியில் அபார வெற்றி பெறுகிறது பிரான்ஸ் அணி!!
Allez Les Blues!!
*இந்த போட்டிகளின் போது மொத்தம் எட்டு அணிகள் விளையாடியது.
*இந்த வருட யூரோ கிண்ண போட்டிகளில் போதுதான் முதன் முறையா ருமேனியாவும், போர்துகல்லும் முதன்முதலாக விளையாடின.
* இறுதி போட்டி பரிசின் Parc des Princes மைதானத்தில் இடம்பெற்றது. 2-0 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
*இறுதி போட்டியை காண 47,368 பார்வையாளர்கள் மைதானத்தில் கூடியிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு போட்டி ஆரம்பித்திருந்தது!
*மொத்தமாக இடம்பெற்ற 15 போட்டிகளில், பிரான்ஸ் அணியை சேர்ந்த Michel Platin மொத்தம் 9 Goal விளாசினார். பிரான்சின் ஹீரோ ஆனார்.