Boulogne-sur-Mer : அகதிகளின் படகு மூழ்கியது.. ஒருவர் பலி... பலர் காயம்!!

12 வைகாசி 2025 திங்கள் 11:31 | பார்வைகள் : 8447
சட்டவிரோதமாக கடற்பயணம் மேற்கொண்ட படகு ஒன்று மூழ்கியதில் அகதி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
மே 11, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் Boulogne-sur-Mer (Pas-de-Calais) கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட படகு ஒன்றே கடலில் கவிழ்ந்துள்ளது.
அவரசப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் Utopia 56 மற்றும் Osmose 62 ஆகிய தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அகதிகளில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், எண்ணிக்கை குறிப்பிடப்படாத ‘சிலர்’ காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1