Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் யாழில்  20 கைதிகளுக்கு விடுதலை

12 வைகாசி 2025 திங்கள் 16:30 | பார்வைகள் : 185


வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர்  டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்