Paristamil Navigation Paristamil advert login

முதலும் முடிவும் ஆன " Stade de France" மைதானம்!

முதலும் முடிவும் ஆன

17 ஆனி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19929


 இந்த வருட யூரோ கிண்ண போட்டிகளின் முதல் போட்டி பிரான்சுக்கும் ரூமேனியாக்கும் இடையில் இடம்பெற்றது. இந்த போட்டியின் போது பிரான்ஸ் 2-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. போட்டி இடம்பெற்ற மைதானம் Stade de France ஆகும். பரிஸ் நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் இந்த மைதானத்திலேயே யூரோ கிண்ண போட்டியின் இறுதி ஆட்டமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Stade de France மைதானம் குறித்த சில தகவல்கள்! 
 
பிரான்சில் கிட்டத்தட்ட 30 உதைப்பந்தாட்ட மைதானங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக பெரியது பரிசில் இருக்கும் Stade de France மைதானம் ஆகும்! 
 
மே மாதம் 2ம் திகதி, 1995ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 28ம் திகதி 1998ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 
 
மைதானத்தை கட்டி முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட மொத்த 'பட்ஜெட்' 290 மில்லியன் யூரோக்கள் ஆகும்! 
 
அண்ணளவாக 80 ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் போட்டிகளை ரசிக்க முடியுமாம். அத்தனை பெரிது அது!
 
மைதான திறக்கப்பட்ட அந்த வருடம் (1998)  உலகின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட போட்டியான FIFA உலகக்கிண்ண போட்டிகள் இந்த மைதானத்தில் இடம்பெற்றன. 
 
UEFA குழுவின் ஆறாவது தலைவராக இருந்த Michel Platini என்பவரே இந்த மைதானத்துக்கு Stade de France என பெயர் வைத்தவர் ஆவார்.
 
rugby உலகக்கிண்ணம், FIFA உலகக்கிண்ணம், EURO கிண்ணம், உலக அத்தலட்டிக்ஸ் போட்டிகள்,  Race of Champion, UEFA Champions League என உலகின் தலைசிறந்த போட்டிகள் அனைத்தையும் கண்டுள்ளது இந்த மைதானம். 
 
இது தவிர, இசை நிகழ்ச்சிகள் நடாத்தவும் இந்த மைதானம் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை The Rolling Stones, Tina Turner,  Rihanna, Eminem, Lady Gaga, Paul McCartney, Madonna என பலர் தங்கள் இசைமேளாவை நடத்தியிருக்கிறார்கள். 
 
இதே மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 13 ம் திகதி பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்று நடைபெற்றதும் அதனைக் காண ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்த் மைதானத்துக்கு வந்திருந்த சமயத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
 
இத்தனை பெருமைகள் கொண்ட இந்த மைதானத்தில் யூரோ கிண்ண போட்டிகளின் இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. அந்த ஆட்டத்தில் பிரான்ஸ். விளையாடுமா??! வெற்றி பெறுமா??! 'சாம்பியன்' ஆகுமா??! காத்திருப்போம்!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்