Seine-et-Marne : வீதியின் எதிர்திசையில் பயணித்த மகிழுந்து... ஒருவர் பலி!!

12 வைகாசி 2025 திங்கள் 17:36 | பார்வைகள் : 439
76 வயதுடைய ஒருவர் வீதியின் எதிர் திசையில் மகிழுந்தில் பயணித்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 63 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Fresnes-sur-Marne (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மே 11, ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. RN3 நெடுஞ்சாலையில் மகிழுந்து ஒன்று வீதியின் எதிர் திசையில் பயணித்துள்ளது. சில நிமிடங்களிலேயே அது விபத்துக்குள்ளானது. இதில் 63 வயதுடைய சாரதி ஒருவர் படுகாயமடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அது தோல்வியில் முடிய, மாலை 5.45 மணி அளவில் அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
மகிழுந்தை எதிர் திசையில் செலுத்திய சாரதி நிறைந்த மது போதையில் இருந்ததாகவும், அவரது மகிழுந்தின் சக்கரத்தில் காற்று இல்லாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.