அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் ஹமாஸ்

12 வைகாசி 2025 திங்கள் 17:30 | பார்வைகள் : 3037
ஹமாஸ் குழு அமெரிக்க-இஸ்ரேலிய பணயக்கைதியான இராணுவ வீரரை விடுதலை செய்ய உள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
அவர்களில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், சிலரை இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது.
இதற்கிடையில் சில பணய கைதிகள் ஹமாஸ் குழுவினால் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.
எனினும், ஹமாஸ் குழுவின் பிடியில் இன்னும் 59 பணய கைதிகள் உள்ளனர்.
அவர்களில் அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ வீரரான எடன் அலெக்ஸாண்டரும் ஒருவர்.
இந்த நிலையில் அலெக்ஸாண்டரை விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் ஹமாஸ் அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்மூலம் அலெக்ஸாண்டர் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நேரடியாக இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1