நடனமாடிய பிரபல நடிகர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

12 வைகாசி 2025 திங்கள் 18:05 | பார்வைகள் : 151
திருமண விழாவில் கலந்து கொண்ட கன்னட திரை உலகின் பிரபல காமெடி நடிகர் திடீரெனம் மாரடைப்பு ஏற்பட்டு காலமான சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல காமெடி நடிகராக இருந்து வந்தவர் ராஜேஷ் பூஜாரி. 33 வயதான இவர் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்பட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராஜேஷ் பூஜாரி மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ’காந்தாரா 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.