பா-து-கலே பயணமாகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

12 வைகாசி 2025 திங்கள் 19:36 | பார்வைகள் : 370
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பா-து-கலே மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
மே 14, புதன்கிழமை இந்த பயணம் அமைய உள்ளது. பிரெஞ்சு சிறைகளில் உள்ள மிக முக்கியமான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு என தனியே ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட உள்ளது. அதற்காக பா-து-கலே மாவட்டத்தைச் சேர்ந்த Vendin-le-Vieil சிறைச்சாலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை அனைவரையும் ஓரிடத்தில் சிறைவைப்பதன் மூலமாக வெளித்தொடர்புகளை துண்டிக்க முடியும் எனவும், சிறிய குற்றங்களுக்கு சிறைவைக்கப்பட்டுள்ளனவர்கள் போதைப்பொருள் விற்பனையாளர்களின் பிரச்சாரங்களை கேட்டு மனம் மாறும் வாய்ப்பை குறைக்கவும் இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையை பார்வையிட ஜனாதிபதி மக்ரோன் ஆதரவு தெரிவித்தார்.