இஸ்லாமிய அமைப்பு பிரான்சிற்கு ஆபத்து!!

12 வைகாசி 2025 திங்கள் 19:58 | பார்வைகள் : 622
இஸ்லாமிய சகோதரர்கள் இயக்கம் எனப்படும் Frères musulmans மற்றும் அதன் 'நுழைவுவாதம்' தொடர்பான ஒரு அறிக்கை மே 21 ஆம் தேதி எம்மானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு ஆலோசனை சபையில் முக்கியமாகப் ஆலோசிக்கப்படும் என உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெயோ தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த அறிக்கை பாதுகாப்பு ரகசிய ஆவணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியவாதத்தை பின்னடையச் செய்யக்கூடிய அறிக்கை இது. மே 21 அன்று நடைபெற உள்ள பாதுகாப்பு சபையில் இஸ்லாமிய சகோதரர்கள் இயக்கம் தொடர்பான ஒரு அறிக்கை விவாதிக்கப்படும். இது 'குடியரசுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல்' என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற புரூனோ ரத்தெயோ , இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானது எனவும் இது அரசாங்கத்தின் மையக் கேள்வியாகவும், அமைச்சுகளிற்கு இடையிலான ஒருங்கிணைப்பிலும் இது இடம் பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இந்த அமைப்பு பிரான்சிற்கு ஆபத்தானது என்று நரூபிக்கப்பட்டு கலைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இல்லாவிட்டால் பாதுபாப்புச் சபையில் விவாதிக்கப்படும் அளவிற்கு இது கொண்டு செல்லப்படாது.