Takata Airbag ஊழல்.. - பிரான்சில் மற்றுமொரு நபர் பலி!!

13 வைகாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 4510
ஜப்பானைச் சேர்ந்த Takata நிறுவனம் மகிழுந்துகளுக்கான Airbag தயாரிப்பதில் ஊழல் செய்திருந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரான்சில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த வாகனத்தொழில்துறை Takata நிறுவனத்தில் ஊழலினால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதுவரை 11 பேர் பலியானதுக்கு குறித்த நிறுவனம் தயாரித்த தரமற்ற AirBag காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Guadeloupe தீவில் இடம்பெற்ற விபத்தில் சாரதி ஒருவர் பலியாகியிருந்தார். அவரது மரணத்துக்கு காரணமாக Takata நிறுவனம் தயாரித்திருந்த தரமற்ற AirBag காரணம் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஊழலில் சிக்கி பதிவாகும் 12 ஆவது மரணமாகும்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1