உக்ரைன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசிய ரஷ்யா

13 வைகாசி 2025 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 225
உக்ரைன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா தாக்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.
30 நாட்கள் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்க வேண்டும் என வலுயுறுத்தின. அதேபோல் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து, போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என கூறியது.
ஆனால் போர் நிறுத்த யோசனையை நிராகரித்ததுடன், துருக்கியில் 15ஆம் திகதி நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விருப்பம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் சம்மதம் தெரிவிக்க, ரஷ்யாவோ அதற்கு பதில் அளிக்கவில்லை.
ஏனெனில், ரஷ்யா போர்நிறுத்த யோசனையை நிராகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று, உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது.
ஷாகித் மற்றும் டிகாய் போன்ற 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்யா ஏவியது என உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.