பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மக்ரோன் தம்பதிகள்!!

13 வைகாசி 2025 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 4730
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் இருரும் பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஜூலை 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் அவர்கள் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளனர். பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் மற்றும் இளவரசி கமீலா ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று அவர்களது பயணம் அமைய உள்ளது.
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமரையும் மக்ரோன் தம்பதியினர் சந்திக்க உள்ளனர். மே 13, இன்று செவ்வாய்க்கிழமை எலிசே மாளிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.