Paristamil Navigation Paristamil advert login

நெல்லிக்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

நெல்லிக்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

13 வைகாசி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 134


சிலர் நெல்லிக்காயை நேரடியாக உட்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் ஊறுகாய், ஜாம் போன்ற வடிவங்களில் சாப்பிடுகிறார்கள். மேலும், சிலருக்கு நெல்லிக்காயின் சுவை பிடிக்காததால் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. நீங்கள் எந்த வடிவத்தில் நெல்லிக்காயை சாப்பிட்டாலும், அது அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. அதேபோல், கோடை காலத்தில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும். நெல்லிக்காயில் குளிர்ச்சியூட்டும் விளைவுகள் இருப்பதால், நெல்லிக்காய் ஜூஸ் கோடைக் காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஆற்றல் பானமாக நம்பப்படுகிறது.

கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது பற்றி மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. உதாரணமாக, நெல்லிக்காய் ஜூஸ் தினந்தோறும் குடிக்கலாமா?, நல்லதா அல்லது கெட்டதா போன்ற பல கேள்விகள் வருகின்றன. உண்மையில் நெல்லிக்காய் ஜூஸ் தினந்தோறும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காயின் குளிர்ச்சியான விளைவு காரணமாக நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் வெப்பநிலையை குறைவாக வைக்க உதவுகிறது. ஆகையால், உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

கோடை வெயில் காரணமாக, உடலில் அதிக வியர்வை வரும். இதனால், உடலில் இருந்து அதிகளவில் திரவம் வெளியேறும். இதன் காரணமாகஇ உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். எனவே, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில், நெல்லிக்காய் ஜூஸ் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

பொதுவாக, கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் மக்களை வாட்டி எடுக்கும். இந்த சூழ்நிலையில், நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். மேலும், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்றவற்றை தடுக்கவும் இது உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: கோடை காலத்தில் சிலருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காய் சாறு உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வெப்ப பக்கவாதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

உங்கள் சருமம், முடி அழகைப் பராமரிப்பதில் நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும். இது கோடையில் தோல் மற்றும் முடி தொடர்பான பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, அதை காலையிலோ அல்லது பகலிலோ வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்