முடிவுக்கு வரும் பரிசின் 'இடியாப்ப சிக்கல்' விவகாரம்!!
12 ஆனி 2016 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 18921
உலகிலேயே மிக கடினமான வேலை எது என்கிறீர்கள்?! நீங்கள் செல்லவேண்டிய இடத்தின் தொடருந்து பாதையை 'Paris Map'இல் கண்டுபிடிப்பதுதான்! வழிகாட்டிக்குள் நீங்கள் தலையை விட்டால்... 'கோடம்பாக்கத்துல ஏறின என்னைய ஆந்திராவுல கொண்டுவந்து விட்டுட்டீங்களேடா!!' என்ற விவேக் கதை தான் உங்களுக்கு!! பரிசில் கிளம்பிய நீங்கள் பெல்ஜியத்தில் தான் போய் நிற்பீர்கள்!! அதை விட்டுவிடுவோம்!
'தி எவர் காம்ப்ளிகேட்டட்' பரிஸ் வழிகாட்டியை தற்போது புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். ரஷ்யாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தலைமையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
300 தொடருந்து நிலையங்கள், 16 தொடருந்து பாதைகள் நிறைந்த பரிசை எந்த வித குழப்பங்களும் இல்லாமல் மிக தெளிவாக உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக வெளிநாட்டவருக்கு உதவும்படியாக பரிசுக்குள் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலா தலங்கள், பார்க்கவேண்டிய இடங்கள், அதற்கு செல்லும் தொடருந்து வழிகள் என 'கம்ப்ளீட் கைட்' ஆக உருவாக்கியிருக்கிறார். பிரஞ்சு அரசு தற்போது வெளியிட்டிருக்கும் வழிகாட்டியை விட, மிக இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கும் இந்த வழிகாட்டியை உத்தியோகபூர்வ வழிகாட்டியாக அறிவிக்குமா பிரெஞ்சு அரசு என்பது தான் இங்கே மில்லியன் டொலர் கேள்வி!!
விரைவில் விற்பனைக்கும் வர இருக்கும் இந்த வழிகாட்டி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. 'கூகுள் மேப் கூட சில நேரம் கைவிட்டுவிடும்... ஆனால் எங்கள் புதிய மேப் உங்களை கைவிடாது!' என டுவீட் தட்டி புன்னகைக்கிறார்கள் இக்குழுவினர்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்!