பிரித்தானிய பிரதமரின் வீட்டில் தீ விபத்து

13 வைகாசி 2025 செவ்வாய் 18:18 | பார்வைகள் : 166
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (13) அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதன் காரணமாக கென்டிஷ் டவுன் சுற்றுப்புறத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுத்துள்ளார்.
அந்த வீட்டின் நுழைவாயிலில் திங்கட்கிழமை (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக இருந்தமையினால் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபருக்கு மேலும் இரண்டு தீ விபத்து சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.