HAUTE-SAVOIE - சாலை விபத்து நேரத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர்!

13 வைகாசி 2025 செவ்வாய் 18:40 | பார்வைகள் : 299
ஞாயிற்றுக்கிழமை மாலை, HAUTE-SAVOIE மாநிலத்தின் சன்-செர்க் (Saint-Cergues) நகரில் ஒரு சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக சென்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய அவர்கள், அந்த பெண்ணின் துணைவன் ஒருவனால் தாக்கப்பட்டனர். அவன் அதிகமாக மது அருந்திய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் தனது மனைவியை அவன் தாக்க முயற்சித்துள்ளான், பின்னர் தீயணைப்பு வீரர்களை தாக்கியுள்ளான்.
இந்த தாக்குதலில் தீயணைப்பு வீரர்கள் முகம் மற்றும் நெஞ்செலும்புகளிலும் காயமடைந்துள்ளனர்.
தாக்கிய நபர் தாக்குதலிற்குப் பின்னர் தப்பி ஓடியுள்ளான். அவனுடைய மனைவி காவற்துறையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், அவரை அடையாளம் காண்பது சிரமமாகியுள்ளது.
இந்த சம்பவம், சனிக்கிழமையன்று எவியோன் லே-பான் (Évian-les-Bains) அருகே ஒரு தீயணைப்பு வீரர் ரோடியோவை நிறுத்த முயற்சிக்கும்போது வாகனம் மோதி படுகாயமடைந்ததற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் மீது ஏற்பட்ட தாக்குதலாகும்.