பிரான்ஸ் vs ஸ்பெயின் - அந்த சாதனை யாருக்கு??!

11 ஆனி 2016 சனி 09:57 | பார்வைகள் : 21842
இந்த வருட யூரோ கிண்ண போட்டிகள் யாருக்கு முக்கியமானதோ இல்லையோ... பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் மிக முக்கியமான காரணங்கள் இருக்கு! பிரான்ஸ் இதுவரை இரண்டு தடவை கிண்ணம் ஜெயித்திருக்கிறது. ஸ்பெயின் மூன்று தடவை.
கடந்த 2012, 2008 ஆகிய போட்டிகளில் ஸ்பெயின் தொடர்ச்சியாக கிண்ணத்தை தட்டிச்சென்று 'ஹாட்ரிக்' அடிப்பதற்காக காத்திருக்கிறது.
பிரான்ஸ் கடந்த 2000 ஆம் ஆண்டும், 1984ஆம் ஆண்டும் பிரான்ஸ் ஜெயித்திருந்தது. அதுவும் இம்முறை பிரான்ஸ் சொந்த மண்ணில் விளையாடுகிறது எனவே தனது மூன்றாவது வெற்றியை நிச்சயம் ருசிக்கவேண்டும் என காத்துக்கொண்டிருக்கிறது.
உதைப்பந்தாட்ட அணியை பொறுத்தவரை இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்ல! இம்முறை பிரான்ஸ் 'குரூப் A'யிலும், ஸ்பெயின் 'குரூப் D'யிலும் இருக்கின்றது. முதல் சுற்று போட்டிகளின் போது இரு அணிகளும் மோதுவதற்கு வாய்புகளே இல்லை!
இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை பொறுத்துதான் இரண்டாம் சுற்றில் பிரான்ஸ் - ஸ்பெயின் மோதுமா என சொல்லமுடியும்! எதுவாக இருந்தாலும் இந்த தடவை பிரான்ஸ் - ஸ்பெயின் மோதும் போட்டிகள் அனைத்தும் அனல் பறக்கும் போட்டிகளாகவே அமையும் என்பதில் ஐயமில்லை!
'ஹாட்ரிக்' எந்த அணிக்கு என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி??!!