ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த அமைச்சர்.. '

14 வைகாசி 2025 புதன் 10:56 | பார்வைகள் : 167
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த நிலையில், முக்கிய அமைச்சர் ஒருவர் அவரை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் திடீரென கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ், ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். கோழிக்கோடு பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.
மேலும், ரஜினியுடன் ஆன இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்த் எந்த மாநிலத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றாலும், அந்த மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் அவரை சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வரிசையில், தற்போது கேரள மாநிலத்திலும் அத்தகைய ஒரு சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.