Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் 6.5 லட்சம் யூரோக்கள் மோசடி: கணக்காளர் கைது!

பாடசாலைகளில் 6.5 லட்சம் யூரோக்கள் மோசடி: கணக்காளர் கைது!

14 வைகாசி 2025 புதன் 14:29 | பார்வைகள் : 733


Seine-Saint-Denis பகுதியில், பல பாடசாலைகளின் கணக்காளர் ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுமார் 650,000 யூரோக்களை மோசடி செய்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக பல பாடசாலைகளின் நிதியை நிர்வகித்து வந்துள்ளார். இந்த மோசடி கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கணக்காளர் முன்னாள் படைத்துறை ஊழியரும் உயர் அதிகாரியும் ஆவார். இவரது செயல்கள் பல ஆண்டுகளாக கவனிக்க படாதது கவலைக்குரியதே.

இந்த சம்பவம் பாடசாலைகளில் நிதி மேலாண்மையில் உள்ள குறைகளைக் காண்பிக்கிறது. எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் ஏற்படாமல் தடுக்க, நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, பாடசாலை நிர்வாகங்கள்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்