Paristamil Navigation Paristamil advert login

கால்பந்து உலகில் நுழைந்த ரொனால்டோ மகன்

கால்பந்து உலகில் நுழைந்த ரொனால்டோ மகன்

15 வைகாசி 2025 வியாழன் 07:52 | பார்வைகள் : 404


கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார். உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரொனால்டோ மகன் சாண்டோஸ் ஜூனியர், செவ்வாய்க்கிழமை (13) நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் நாட்டுக்காக 15 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் அறிமுகமானார்.

இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போர்ச்சுகல் அணிக்காக தனது மகன் அறிமுகமானதை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , போர்ச்சுகல் அணிக்காக நீ அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த கால்பந்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் சாண்டோஸ் உடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அதேவேளை தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்