'என்னம்மா கூகுள், இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா??!!'
7 ஆனி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18901
'கூகுள்' என்ற தேடுபொறி இயந்திரத்தை பயன்படுத்தாதவர்கள் இன்று மிக குறைவு.. 'கார்' வாங்குவதானாலும் சரி, காலநிலை பற்றி அறிந்துகொள்வதானாலும் சரி.. 'கேளுங்கள் தரப்படும்!' என சேவை செய்துவரும் கூகுள் அலுவலகத்தில் ஒரு சிக்கல் எழுந்தது. 8, rue de Londres, Paris எனும் முகவரியில் தற்போது கூகுளின் புத்தம்புதிய தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. அலுவலகம் புதிதாக இருந்தால் மட்டும் போதுமோ??!! அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்தம் வேண்டும். வருமான வரி செலுத்தாமல் பல வருடங்களாக கூகுள் நிறுவனம் கம்பி நீட்டிக்கொண்டிருந்தது...!!
பொறுத்தது போதும் என கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பிரான்சில் உள்ள கூகுள் தலைமையகத்துக்குள் நுழைந்த பிரெஞ்சு வருமான வரி அதிகாரிகள் 'கட்டிவைக்காத குறையாக' கூகுள் நிறுவன அதிகாரிகளை விசாரணையில் துளைத்தெடுத்தார்கள். 1.6 பில்லியன் யூரோக்கள் பணம் வரி செலுத்தாமல் கம்பி நீட்டியதற்காகவே இந்த 'ரெய்டு' என பிரெஞ்சு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அப்போது நடந்தது தான் வேடிக்கை!!
கூகுள் நிறுவனத்துக்குள் அதிகாரிகள் நுழைந்ததும் முதலில் இணையத்தை துண்டித்துவிட்டார்களாம். இதனால் கூகுளின் பிரெஞ்சு தலையமைகத்துக்குள்ளேயே கூகுளை பன்படுத்த முடியாமல் போய்விட்டது. (அட பாவமே...) 'காஞ்சுபோன நதியெல்லாம் வற்றாத கடலை பாத்து ஆறுதல் அடையும்... அந்த கடலே காஞ்சு போயிட்டா??!!' என்ற நிலமை ஆனது கூகுளுக்கு. விசாரணைகள் முடியும் வரை இணைய பாவனை இல்லையென்றாகிவிட்டது. தொடர்ந்து காலையில் இருந்து மாலை வரை இணைய தொடர்பு இல்லாமல் தேமே என விழி பிதுங்கி நின்றதாம் கூகுள்!!