Paristamil Navigation Paristamil advert login

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என நினைவுத்தூபி.. பிரான்சில் முதன்முறையாக..!!

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என நினைவுத்தூபி.. பிரான்சில் முதன்முறையாக..!!

15 வைகாசி 2025 வியாழன் 10:08 | பார்வைகள் : 731


நாஸிப்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என பிரான்சில் முதன்முறையாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பா முழுவதிலும் இருந்து 5,000 தொடக்கம் 15,000 பேர் வரை நாடு கடத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனும் காரணத்தினால் மட்டுமே அவர்கள் நாடு கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இருந்தனர். பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த 60 தொடக்கம் 200 பேர் வரை வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதை அடுத்து பிரான்சில் முதன்முறையாக  நாஸிப்படையினரால் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களை நினைவுகூரும் விதமாக மே 17 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் இந்த தூபி திறந்துவைக்கப்பட உள்ளது.  

சிட்னி, பர்சிலோனா, பெர்லின் போன்ற நகரங்களில் இதுபோன்ற தூபிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசில் முதன்முறையாக அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்