ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் விக்ரம் இணைகிறாரா ?

15 வைகாசி 2025 வியாழன் 12:42 | பார்வைகள் : 148
’பாகுபலி’, ’பாகுபலி ’2, ’ஆர்ஆர்ஆர்; ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விட்டது என்பதும் தெரிந்தது.
மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என்றும், அது மட்டும் இன்றி பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ் சுகுமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் தமிழ் மாஸ் நடிகர் விக்ரம் இணிஅய இருப்பதாகவும், அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், கன்னட திரை உலகில் இருந்தும் ஒரு பிரபலம் இந்த படத்தில் இணைவார் என்று கூறப்படுவதால், ஒரு நிஜமான பான் இந்திய திரைப்படமாக இந்த படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் ஏற்கனவே தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நிலையில், ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் அவருக்கு எந்தவிதமான கேரக்டர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்