ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா?

15 வைகாசி 2025 வியாழன் 14:42 | பார்வைகள் : 171
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் கோலிவுட் திரை உலகையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படமே 'கூலி'. இதில், முதன்முறையாக ரஜினிகாந்தும், லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளனர். இதன் காரணமாக, இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் “தேவா” என்ற நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, இந்த ‘கூலி’ படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் ரூ.280 கோடி என கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
74 வயதில் ஒரு இந்திய நடிகர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்குவது, திரையுலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்காக, பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றால், அவரின் அடுத்த படத்திற்கு சம்பளம் ரூ.300 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.