'ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?!'
5 ஆனி 2016 ஞாயிறு 13:31 | பார்வைகள் : 18845
'பசு இருந்தாலும் பாலாகும்.. செத்தாலும் தோலாகும்!' என வைரமுத்து எழுதியிருக்கார். 'யானை இருந்தாலும் பொன்... இறந்தாலும் பொன்..!' என ஒரு பழமொழி இருக்கு... அந்த வரிசைல இதுக்கு இன்னுமொரு உதாரணம் கூட இருக்கு!
அழகு பரிசில்... சென் நதி ஓரத்தில்.. 153 மீட்டர் நீளத்தில்... Pont de l'Alma எனும் பெயரில் ஒரு மேம்பாலம் இருக்கிறது. 'கிரிமியன் போர்' நினைவாக கட்டப்பட்ட இந்த பாலத்துக்கு 'Battle of Alma' என ஒரு பெயரும் உண்டு.. அதன் வரலாற்றை பிறிதொரு நாளில் பார்க்கலாம். இந்த மேம்பாலத்தை மூன்றாம் நெப்போலியன் 1854 இல் கட்ட ஆரம்பித்ததாகவும்... அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மன்னர்கள் இந்த மேம்பாலத்தை கட்டி முடித்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி கைகொடுத்த பல மன்னர்களில் முக்கியமானவர் தான் Zouave மன்னன்.
இவரும் கிரிமியன் போரில் கலந்துகொண்ட மாவீரன். இந்த போர் நினைவாக கட்டப்பட்ட மேம்பாலம் என்பதால் இந்த மன்னனுடைய பெரிய சிலை ஒன்றை சென் நதியில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வைத்ததோடு மட்டுமில்லாமல்.. பத்திரமாக பாராட்டி.. சீராட்டி.. 'குளிப்பாட்டி' வைத்திருக்கிறார்கள். நல்ல விஷயம் தானே?! எங்கிறீர்களா?! அப்போ தொடர்ந்து படியுங்க..
சென் நதியில் வைக்கப்பட்ட அந்த சிலையை வைத்து என்ன செய்கிறார்கள் என்கிறீர்கள்...?? சென் நதியின் நீர் மட்டத்தை அளக்கிறார்கள். சிலையின் கால் பகுதியில் தண்ணீர் வந்தால் ஒரு அளவு... இடுப்பு வரை வந்தால் ஒரு அளவு.. கழுத்து வரை வந்தால் ஒரு அளவு என... அட பாவமே??!!
1910ம் வருடம் பிரான்ஸ் முழுவதும் பெய்த்த கன மழையால் Zouaveவுக்கு கழுத்து வரை தண்ணீர் வந்துவிட்டதாம். அதன் பின்னர் இப்போது பிரான்சில் பெய்துவரும் மழையால் Zouaveவின் முழங்கால் வரை தண்ணீர் மேலெழும்பி விட்டதாம். அட கொடுமையே... ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்??