தமிழக கவர்னர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் கேட்ட ஜனாதிபதி

16 வைகாசி 2025 வெள்ளி 06:08 | பார்வைகள் : 100
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அரசியல் சான பிரிவு 143 (1) மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழியாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்த விளக்கத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
* ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?
* அவ்வாறு மசோதா கவர்னர் இடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
* அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?
* அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வுக்கு செய்வதற்கு தடையாக உள்ளதா?
* அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
* அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா?
* உள்பட 14 கேள்விகளை எழுப்பியுள்ளது.