பிரித்தானியா மீது பயண எச்சரிக்கை வெளியிட்ட அமெரிக்கா

15 வைகாசி 2025 வியாழன் 19:48 | பார்வைகள் : 194
அமெரிக்கா தனது குடிமக்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றான பிரித்தானியா மீது புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிரித்தானியாவிற்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்கர்கள் பயணம் செய்கிறார்கள்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட Level 2 Advisory-யின் கீழ், பிரித்தானியா, இத்தாலி, பஹாமாஸ், சீனா, ஹொங்ஹொங், கிரீன்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும்.
பயணிகள் அங்கு பயணிக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கையின் முக்கிய அம்சம் பயங்கரவாதம் தொடர்பானது. "பிரித்தானியாவில் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், சுற்றுலா பகுதிகள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை இலக்காகக் கொண்டிருக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.
பயணிகள் சுற்றியுள்ள சூழ்நிலையை எப்போதும் கவனிக்க வேண்டும்.
உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும்.
அவசர நிலை ஏற்படும் போது, உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
ரஷ்யா, சிரியா, ஆப்கானிஸ்தான், லெபனான், சோமாலியா, யேமன், ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகள் "Level 4: Do Not Travel" பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகளில் போர், அரசியல் குழப்பம் மற்றும் தவறான கைது அபாயங்கள் அதிகமாக இருப்பதால் அமெரிக்கர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பயண எச்சரிக்கைகள், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன.