Paristamil Navigation Paristamil advert login

"பத்து நகரங்கள் - பத்து மைதானங்கள்"

4 ஆனி 2016 சனி 10:30 | பார்வைகள் : 19705


இதோ.. இன்று ஜூன் நாலாம் திகதி.. இன்னும் ஆறு நாட்களில் யூரோகிண்ண போட்டிகள் ஆரம்பிக்க இருக்கின்றன. விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத இப்போட்டிகள் இந்த முறை பிரான்சின் பத்து நகரங்களில்... பத்து மைதானங்களில் நடைபெறுகிறது!! 
 
2016 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் பிரான்சில் நடைபெறுகிறது என முடிவானதுமே மைதானங்கள் தேர்வுக்கான வேலைகளும் வெகு ஜோராய் ஆரம்பித்து விட்டன. முதன் முறையாக 24 அணிகள் மோதுகின்றன என்பதால் அதிக மைதானங்களின் பெயர்கள் 'லிஸ்ட்'டில் சேர்க்கப்பட்டு... அழிக்கப்பட்டு.. ஒருவழியாக பத்து மைதானங்களை தேர்ந்தெடுத்தார்கள்.
 
-நகரங்களும் மைதானங்களும்-
 
Saint-Denis – Stade de France
Marseille – Stade Vélodrome
Lyon – Stade des Lumières
Lille – Stade Pierre-Mauroy
Paris – Parc des Princes
Bordeaux – Stade Bordeaux-Atlantique
Saint-Étienne – Stade Geoffroy-Guichard
Nice – Allianz Riviera
Lens – Stade Félix-Bollaert
Toulouse – Stadium Municipal
 
இந்த பட்டியலில் உள்ள Parc des Princes மற்றும் Stade Vélodrome மைதானங்கள் 'நாங்கல்லாம் படா கத்திய பாத்தவைங்க!' டைப். யூரோ கிண்ண போட்டிகளின் ஆரம்பத்தில் இருந்து (1960) இப்போதுவரை இங்கு போட்டிகள் நடைபெறுகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்