உழவு இயந்திரங்கள் மூலம் வீதிகளை முடக்கி - மீண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

15 வைகாசி 2025 வியாழன் 20:55 | பார்வைகள் : 566
விவசாயிகளின் வீதி முடக்க போராட்டம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், அடுத்து வரும் சில வாரங்களில் மீண்டும் அவை துளிர்விட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரெஞ்சு தேசிய தொழிலாளர் கூட்டமைப்பான FNSEA இன் தலைவர் இதனை அறிவித்துள்ளார். உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி போக்குவரத்தினை முடக்க விவசாய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. அதன்படி மே 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
”நமது பண்ணைகளில் உறுதியான நடவடிக்கை தேவை. இது தண்ணீர் பிரச்சினையிலும் - உற்பத்தி வழிமுறைகள் பிரச்சினையிலும் தெளிவாகத் தெரிகிறது," என அவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரியில் விவசாயிகளுகான சட்டமாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தது. இருந்தபோதும் அது இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.