'ஸ்மார்ட்' தொலைபேசியில் போட்டி விபரங்கள்!
3 ஆனி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21338
இன்றைய திகதியில் ஸ்மார்ட் தொலைபேசி இல்லாத மனிதர்களே இல்லை. உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது 'Euro 2016' எனும் இந்த செயலி! இதில் நீங்கள் உதைப்பந்தாட்ட விபரங்களை 'அ முதல் ஃ' வரை அறிந்துகொள்ளலாம்!
அண்ட்ரோயிட் மற்றும் அப்பிள் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலியில் நீங்கள் 'ஸ்கோர்' விபரங்களை நேரடியாக தெரிந்துகொள்ளலாம். மேலும், போட்டிகள் நடைபெறும் திகதி, நேரம், இடம், மைதானத்தின் பெயர் என சகல விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
தொடர்ந்து, போட்டிகள் தொடர்பான புதிய செய்திகள், கட்டுரைகளையும்.. பல முக்கியமான காணொளிகளை HD தரத்தில் பார்த்தும் கொள்ளலாம்! உங்களுக்கு பிடித்தமான அணியை தேர்ந்தெடுத்து அதுதொடர்பான செய்திகள், விபரங்கள், 'ஸ்கோர்' போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடியும்!
மேலும் போட்டிகளுக்காக நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கும் இடங்கள்.. விலை.. கைவசம் இருக்கும் நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை போன்ற விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்!


























Bons Plans
Annuaire
Scan