மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி பலி

16 வைகாசி 2025 வெள்ளி 10:12 | பார்வைகள் : 161
மிஸிஸாகாவில் 401 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய அதிவேக பாதையில் அபாயகரமான பொருட்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்ததில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்டாரியோ மாகாண காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
விபத்து காலை 10:20 மணியளவில் இடம்பெற்றதாகவும், இந்த சம்பவம் காரணமாக, நெடுஞ்சாலையின் அந்த பகுதியில் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிஸிஸாகா சாலை முதல் வின்ஸ்டன் சர்ச்சில் புல்வராய்வு வரை எக்ஸ்பிரஸ் லேன்கள் இரு திசைகளிலும் முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிரெய்லர் ஒரு கான்கிரீட் சுவர்களில் மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்குள்ளான டிரெய்லர் எப்படி கவிழ்ந்தது என்பது குறித்து தற்போது தெளிவான தகவல்கள் இல்லை.
பாதுகாப்பு கருதி அந்த பகுதியை விட்டு விலகி செல்ல மாற்றுப்பாதைகளை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்க்பட்டிருந்தது.