பரிசில் பாரிய அளவு கொக்கைன் பறிமுதல்!!

16 வைகாசி 2025 வெள்ளி 10:38 | பார்வைகள் : 536
பரிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் மிகப்பெரும் அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மே 13 ஆம் திகதி அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அடையாம் தெரிவிக்கப்படாத பகுதி ஒன்றைச் சுற்றி வளைத்தனர். அங்குள்ள ரகசிய இடம் ஒன்றில் பெருமளவில் கொக்கைன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மொத்த எடை 435 கிலோ என தெரிவிக்கப்படுகிறது.
அவற்றை காவல்துறையினர் மீட்டதுடன், பல்வேறு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இவ்வருடத்தில் பரிசில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகூடிய போதைப்பொருள் இதுவாகும்.